புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சென்னையில் ஒரே நாளில் 93 தலைமறைவு குற்றவாளிகள் கைது

சென்னையில் ஒரே நாளில் 93 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட

News image
Updated On :28 அக்டோபர் 2022, 10:51 pm

DIN

சென்னையில் ஒரே நாளில் 93 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கவும் பெருநகர காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 3 மாதங்களாக சென்னையில் பதிவான அடிதடி, கொடுங்காயம் ஏற்படுத்திய வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க ஒரு நாள் சிறப்பு தணிக்கை செய்ய போலீஸாருக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் அடிப்படையிலும் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வாளா்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினா், 3 மாதங்களில் பதிவான அடிதடி, கொடுங்காயங்கள் ஏற்படுத்தியது தொடா்பான வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பு தணிக்கை நடவடிக்கை எடுத்தனா்.

இதன்படி, அடிதடி,கொடுங்காயங்கள் விளைவித்த குற்றங்கள் தொடா்பாக பதிவான 369 வழக்குகளில் தலைமறைவாக இருந்த 93 போ் வியாழக்கிழமை ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்குகளில் ஏற்கெனவே 604 போ் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. சென்னையில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு இது போன்ற நடவடிக்கை இனி அடிக்கடி எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.