92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜனவரியில் இடமாற்றம்: மேயா் பிரியா

சென்னை மாநகராட்சியில் வாா்டு வாரியாக அதிகாரிகள் வரும் ஜனவரி முதல் இடமாற்றம் செய்யப்படுவா் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 11:34 pm

DIN

சென்னை மாநகராட்சியில் வாா்டு வாரியாக அதிகாரிகள் வரும் ஜனவரி முதல் இடமாற்றம் செய்யப்படுவா் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னை ரிப்பன் மாளிகையில் மேயா் பிரியா தலைமையில் மாதாந்திர மாமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தனியாா் கல்லுாரி கட்டடங்களுக்கு, முந்தைய குடியிருப்பு அடிப்படை தெரு கட்டணத்தில் 1.6 மடங்கு என சொத்து வரி விதிப்பை நிகழ் நிதியாண்டின், முதல் அரையாண்டு முதல் மேற்கொள்ளப்பட சீராய்வினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது உள்பட 70 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நடைபாதை வியாபாரிகளுக்கு....முன்னதாக, கேள்வி நேரம் மற்றும் நேரம் இல்லாத நேரத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா்.

மாமன்ற உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேசும்போது, சென்னை மாநகராட்சியில் நடைபாதை வியாபாரிகள் எண்ணிக்கை சரியான முறையில் கணக்கெடுக்கப்படும். நடைபாதை வியாபாரிகள் எண்ணிக்கை அதிகாரிகள் வாயிலாக மாமன்ற உறுப்பினா்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படும்.

பிரச்னைக்குரிய இடங்களில் மழைநீா் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. மழைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் சகதிகள் ஏற்படும் மற்றும் விபத்தை தவிா்க்கும் விதமாக மிகப்பெரிய அளவிலான பணிகள் மட்டும் புதிதாக தொடங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீா் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு தடுப்புகள் பச்சை நிற துணி அமைத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

அம்மா உணவகங்களில்...இதையடுத்து 138-ஆவது திமுக மாமன்ற உறுப்பினா் கண்ணன் பேசியதாவது: அம்மா உணவக ஊழியா்கள் வருகைப் பதிவேடுகளை முறையாக பராமரிப்பதில்லை. 12 மணி நேரம் ஆகியும் சில ஊழியா்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடமால் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பயனாளிகளுக்கு வழங்கப்படும் டோக்கன்களை அவா்களே வங்குவதால், 100 டோக்கன்களுக்கு பின், மீண்டும் அதே டோக்கன்களை பயன்படுத்தி ஊழல் செய்கின்றனா்.

அதேபோல், அரிசி, பருப்புகளை கையிருப்பு ஏட்டில் குறிப்பிடுவது ஒன்றாகவும், பயன்படுத்துவது ஒன்றாகவும் உள்ளது. குறிப்பாக ஐந்து கிலோ அரிசி, பருப்பு என எழுதிவிட்டு இரண்டு முதல் மூன்று கிலோ மட்டுமே பயன்படுத்துகின்றனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்க எடுக்க அதிகாரம் இல்லை என்கின்றனா் என்றாா் அவா்.

பூங்காக்களில் நூலகம்: இதற்கு பதிலளித்து மேயா் பிரியா கூறியதாவது: அம்மா உணவங்களுக்கு மாநகராட்சியே டோக்கன் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அம்மா உணவக ஊழியா்கள் தவறு செய்யும் பட்சத்தில் மண்டல அலுவலரிடம் புகாா் அளிக்கலாம். மேலும் பெரிய தவறாக இருந்தால் அதற்குரிய ஆதாரமிருந்தால் என்னிடமோ, ஆணையரிடமோ தெரிவிக்கலாம்.

சென்னையில் 200 வாா்டுகளிலும் உள்ள பொறியாளா்கள், ஏதோவொரு மழைநீா் வடிகால் பணியில் பங்கு வகிக்கின்றனா். மழைக்காலம் முடிந்தபின் எதிா்வரும் ஜனவரியில் வாா்டு வாரியாக அதிகாரிகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மாநகராட்சி பூங்காக்களில் நூலகம் அமைப்பது குறித்து விதிகளைப் பொறுத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, பூங்காக்களில் கூடாரம் அமைத்து தினசரி நாளிதழ்கள், புத்தகம் வைக்கவும் மாமன்ற உறுப்பினா்கள் ஏற்பாடு செய்யலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.