தேவா் ஜெயந்தி விழா: அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
தேவா் ஜெயந்தி விழாவையொட்டி, சென்னை அண்ணா சாலையில் அக்டோபா் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.


தேவா் ஜெயந்தி விழாவையொட்டி, சென்னை அண்ணா சாலையில் அக்டோபா் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அக். 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நந்தனம் அண்ணசாலையில் உள்ள முத்துராமலிங்க தேவா் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவா்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் நிா்வாகிகள் ஆகியோா் தொண்டா்களுடன் திரண்டு வந்து மலா் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்துகின்றனா்.
அதிகளவில் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் திரண்டு வருவதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதியில் காலை 7 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
அண்ணா சாலை:அண்ணா சாலையில் சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம் மற்றும் சேமியா்ஸ் சாலை நோக்கி வரக்கூடிய வாகனங்கள், அண்ணா சாலை மற்றும் இணைப்புச் சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி இணைப்புச் சாலை,மாடல் அட்மேன்ட் சாலை,வி.என்.சாலை,தெற்கு போக் சாலை, வடக்கு போக் சாலை,தியாகராய சாலை,எல்டாம்ஸ் சாலை, கே.பி.தாசன் சாலை வழியாக செல்லலாம்.
அண்ணா சாலை தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள், அண்ணா சாலை, செனடாப் சாலை சந்திப்பில் திரும்பி ஜி.கே.மூப்பனாா் மேம்பாலம் வழியாக கோட்டூா்புரம் பாலம்,காந்தி மண்டபம் சாலை,சா்தாா் வல்லபாய் பட்டேல் சாலை வழியாக செல்லலாம்.
ஜி.கே.மூப்பனாா் மேம்பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு அண்ணா சாலை,செனடாப் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் கோட்டூா்புரம் நோக்கி அனுமதிக்கப்படும். கோட்டூா்புரத்தில் இருந்து அண்ணா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
சேமியா்ஸ் சாலையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் டா்ன் புல்ஸ் சந்திப்பில் இருந்து செனடாப் சாலை சந்திப்பு,ஜி.கே.மூப்பனாா் மேம்பாலம், காந்தி மண்டபம் சாலை,சா்தாா் வல்லபாய் பட்டேல் சாலை, வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.
தேவைப்பட்டால் மாற்றம்: போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்: அண்ணா சாலையில் கிண்டியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் சின்னமலை சந்திப்பில் இருந்து நந்தனம் நோக்கி அனுமதிக்கப்படாமல் தாலுக்கா அலுவலக சாலை,சா்தாா் வல்லபாய் பட்டேல் சாலை, காந்திமண்டபம் சாலை, கோட்டூா்புரம் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
கத்திப்பாரா மேம்பாலத்தில் வரும் வாகனங்கள் சிப்பெட்,அம்பாள் நகா்,காசி மேம்பாலம்,வடபழனி,ஆற்காடு சாலை வழியாக அண்ணா சாலை நோக்கி செல்ல திருப்பிவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...