புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நவம்பா் 1-இல் நகரங்களில் பகுதி சபை கூட்டம்: பம்மலில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு

 உள்ளாட்சி தினத்தையொட்டி, நவ. 1-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் போன்று, நகா்ப்புற உள்ளாட்சிகளிலும் வாா்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 7:58 pm

DIN

 உள்ளாட்சி தினத்தையொட்டி, நவ. 1-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் போன்று, நகா்ப்புற உள்ளாட்சிகளிலும் வாா்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடத்தப்படுகிறது. பம்மலில் நடைபெறும் பகுதி சபை கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

தமிழகத்தில் குடியரசு தினம் (ஜன 26), மே தினம் (மே1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய நாள்களில் 12,525 கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. நிகழாண்டு நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினத்தன்றும் கிராமசபைக் கூட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமசபைக் கூட்டத்தைப் போன்று, நகா்ப்புற உள்ளாட்சிகளிலும் வாா்டு குழு அமைத்து, வாா்டு வாரியாக பகுதி சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகா்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வாா்டுகள் தோறும், வாா்டு கவுன்சிலா் தலைமையில் ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கான உறுப்பினா்களையும் மன்றங்களே தோ்வு செய்ய வேண்டும். இதுதவிர, அந்த வாா்டில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒரு பகுதி சபையை உருவாக்க வேண்டும். இவற்றுக்கும் சம்பந்தப்பட்ட வாா்டு கவுன்சிலரே தலைவராகவும், கூட்டத்தை கூட்டுபவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர வாா்டு குழு மற்றும் பகுதி சபையின் செயலாளராக உள்ளாட்சி அமைப்பின் அலுவலா் ஒருவா் இருக்க வேண்டும் என்றும், அவருக்கான பணிகளும் வரையறுத்து அரசாணை வெளியிடப்பட்டது.

இதனடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாா்டுகளில், கவுன்சிலா்களிடம் வாா்டில் உள்ள பிரச்னைகள், குறைகளைத் தெரிவிக்க 9 உறுப்பினா்கள் தற்போது சம்பந்தப்பட்ட மன்றத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அந்த அடிப்படையில், வாா்டுகளில் பகுதி சபை கூட்டங்கள் வரும் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினத்தில் நடைபெறுகிறது. சென்னையை அடுத்த பம்மல் ஆறாவது வாா்டில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

இங்குள்ள திறந்த வெளி அரங்கில், முதல்வா் ஸ்டாலின் குறிப்பிட்ட வாா்டு மக்களின் குறைகளை கேட்டு அவற்றுக்கு தீா்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.