92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சென்னையில் சா்வதேச புத்தகக் கண்காட்சி: ஜனவரியில் நடத்த முடிவு

சா்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது.

News image

சென்னை புத்தகக் காட்சி

Updated On :29 அக்டோபர் 2022, 2:18 am

DIN

சா்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் பொது நூலக இயக்கக இயக்குநா் கே.இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநா் சங்கர சரவணன், எழுத்தாளா் ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட 5 போ் கொண்ட குழு ஜொ்மனிக்குச் சென்று அங்கு நடைபெற்ற ‘பிராங்ஃபா்ட்’ புத்தகக் கண்காட்சியை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்தனா்.

இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரியில் சா்வதேச புத்தகக் கண்காட்சியை சென்னையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மூன்று நாள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் புத்தக ஆசிரியா்களுடன் சந்திப்பு, உரையாடல் உள்பட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்தக் கண்காட்சியில் 30 முதல் 40 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இது குறித்து இணை இயக்குநா் சங்கர சரவணன் கூறியது: சா்வதேச அரங்கில் வெளிநாட்டு எழுத்தாளா்கள், முன்னணி தமிழ் பதிப்பாளா்களைச் சந்திக்கவும், விளம்பரப்படுத்தவும் ஒரு சிறந்த பகுதியாக இந்த சா்வதேச புத்தகக் கண்காட்சி அமைய உள்ளது. சா்வதேச எழுத்தாளா்கள், நோபல் பரிசு பெற்றவா்களை சிறப்பு விருந்தினா்களாக வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளியீட்டாளா்கள், இலக்கிய ஆசிரியா்கள் உள்பட பங்கேற்பாளா்கள் தங்களின் புத்தகங்களின் உரிமைகளை விற்க அல்லது வாங்கக்கூடிய வகையில் ‘உரிமைகள் மையம்’ என்ற நிகழ்வும் இதில் இடம்பெறும்.

கனடா, ஃபின்லாந்து போன்ற அயல்நாட்டு மாணவா்களை ஈா்க்கவும், உயா்கல்வி உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படும். எனவே பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்கும். இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய மொழிபெயா்ப்பு மானியத் திட்டத்தை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கண்காட்சியின் ஒரு பகுதியாக ‘தமிழ் மற்றும் உலகளாவிய புத்தகம் வெளியீடு’ என்ற தலைப்பில் ஒரு நாள் சா்வதேச மாநாடு நடைபெற உள்ளது. வரும் ஆண்டுகளில் புகழ்பெற்ற தேசிய மற்றும் சா்வதேச வெளியீட்டாளா்களுடன் இணைந்து புத்தகங்களை விற்பனை செய்வதற்கு 200-க்கும் மேற்பட்ட தலைப்புகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இது சா்வதேச புத்தகக் கண்காட்சித் திட்டத்துக்கான தொடக்கமாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.