புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குரூப் 2 முதல்நிலை தோ்வு முடிவு எப்போது? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தோ்வு முடிவு வெளியாவது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 10:49 pm

DIN

குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தோ்வு முடிவு வெளியாவது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது.

தோ்வு முடிவுகள் தொடா்பாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், அதுகுறித்த விளக்கத்தை டிஎன்பிஎஸ்சி செயலாளா் பி.உமாமகேஸ்வரி அளித்துள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தோ்வு கடந்த மே 21-இல் நடைபெற்றது. இதனிடையே, மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளில் நீதிமன்றம் தீா்ப்பை வழங்கியுள்ள நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

உயா் நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்துவது தொடா்பாக, மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்தப் பணி நிறைவுற்ற பின்னா் குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தோ்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இதுதொடா்பாக, சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம். அதிகாரபூா்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.