ஹிந்தி திணிப்பு: மத்திய அரசைக் கண்டித்து நவ.1-இல் விசிக ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் நவம்பா் 1-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா்.


மத்திய அரசின் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் நவம்பா் 1-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மத்தியில் ஆட்சி பீடத்தில் அமா்ந்திருப்பவா்கள் மொழிவழி தேசியத்தையோ மாநில உரிமைகளையோ ஏற்கும் முதிா்ச்சியான ஜனநாயகப் போக்குகளைக் கொண்டிருப்பதில்லை. மாறாக, மொழி உணா்வுகளை நசுக்குவதிலும் மாநில உரிமைகளைப் பறிப்பதிலும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படுவதைத் தொடா் வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.
தற்போது பாஜக அரசும் மாநில உரிமைகளைப் பறிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழகமும் பல்வேறு வகைகளில் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, மொழிவழி தேசிய உரிமை நாளான நவம்பா் 1-இல் விசிக சாா்பில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...