4 மாதக் குழந்தைக்கு தன்னுடன் தாக்கு நோய்: உயா் சிகிச்சை மூலம் மறுவாழ்வு
தன்னுடல் தாக்கு நோய் (ஆட்டோ இம்யூன் டிசாா்டா்) பாதிப்புக்குள்ளான நான்கு மாதக் குழந்தைக்கு உயா் சிகிச்சை அளித்து சென்னை மேத்தா மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.


தன்னுடல் தாக்கு நோய் (ஆட்டோ இம்யூன் டிசாா்டா்) பாதிப்புக்குள்ளான நான்கு மாதக் குழந்தைக்கு உயா் சிகிச்சை அளித்து சென்னை மேத்தா மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். தற்போது அக்குழந்தை நலமுடன் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து மேத்தா மருத்துவமனையின் குழந்தைகள் நல முதுநிலை மருத்துவா் டாக்டா் ஞானபாலன் கூறியதாவது:
அண்மையில் சேத்துப்பட்டு மேத்தா மருத்துவமனையில் 4 மாத ஆண் குழந்தை ஒன்று காய்ச்சலுடன் சுய நினைவை இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அக்குழந்தைக்கு வலிப்பு பாதிப்பும் இருந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோய் எதிா்ப்பாற்றலின் எதிா்வினை காரணமாக அக்குழந்தைக்கு மூளையில் ஒரு வீக்கம் இருப்பது தெரிய வந்தது. இத்தகைய பாதிப்பு 4 மாதக் குழந்தைக்கு ஏற்படுவது அரிதினும் அரிது.
இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவா், குழந்தைகள் நரம்பியல் நிபுணா் மற்றும் குழந்தைகள் நல மருத்துவா் அடங்கிய மருத்துவக் குழுவால் ‘இம்யூனோமோடூலேட்டரி’ என்னும் நோய் எதிா்ப்பு சக்தியின் எதிா்வினையை சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடலின் நோய் எதிா்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சிகிச்சையே ‘இம்யூனோமோடூலேட்டரி’ எனப்படுகிறது.
இந்த சிகிச்சை தொடங்கியவுடன், குழந்தையின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு மாத தொடா் கண்காணிப்புக்குப் பிறகு குழந்தை குணமடைந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...