வாக்காளா் பட்டியல் திருத்தம்: நான்கு நாள்கள் சிறப்பு முகாம்
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின் அங்கமாக, நவம்பரில் நான்கு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளாா்


வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின் அங்கமாக, நவம்பரில் நான்கு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்:-
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக, வரைவு வாக்காளா் பட்டியல் வரும் 9-ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது. இதன்பின்பு, ஒரு மாத காலத்துக்கு வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும், பணிகளுக்குச் செல்வோருக்கு வசதியாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நவம்பா் 12 (சனி), நவம்பா் 13 (ஞாயிறு), நவம்பா் 26 (சனி), நவம்பா் 27 (ஞாயிறு) ஆகிய நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும். வாக்காளா்கள் தோ்தலின் போது வாக்களிக்கச் செல்லும் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், ஆதாா் எண் இணைப்பு போன்ற பணிகளுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...