‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சென்னையில் 2,000 கரோனா தடுப்பூசி முகாம்கள்

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) 2,000 முகாம்கள் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 7:32 pm

DIN

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) 2,000 முகாம்கள் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற 34 சிறப்பு தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41,90,373 கரோனா தடுப்பூசிகள் இதனைத் தொடா்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் 04.09.2022

(ஞாயிற்றுக்கிழமை) அன்று 35-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்காக வாா்டு ஒன்று 10 முகாம்கள் என 200 வாா்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்காக ஒரு வாா்டிற்கு 5 சுகாதாரக் குழுக்கள் வீதம் 200 வாா்டுகளுக்கு 1,000 சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தென்னக ரயில்வே துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனா்.

முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதுக்கு மேற்பட்ட நபா்கள், இணை நோயுடைய நபா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது, 75 நாள்களுக்கு அதாவது வருகின்ற செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை 42,70,342 நபா்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபா்களாக உள்ளனா். இவா்களில் 5,54,588 நபா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வரும் 4-ஆம் தேதி நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.