‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மத்திய அரசின் மீது பழிபோடுவதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் : கே.அண்ணாமலை

போதைப் பொருள் விவகாரத்தில் மத்திய அரசின் மீது பழிபோடுவதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறியுள்ளாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 7:33 pm

DIN

போதைப் பொருள் விவகாரத்தில் மத்திய அரசின் மீது பழிபோடுவதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவின் கஞ்சா தலைநகரம் தமிழகம் என்பதுபோல போதைப் பொருள் புழக்கம் உச்சத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் முந்த்ரா துறைமுகத்திலிருந்துதான் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் போதைப் பொருள் செல்கிறது என்று அமைச்சா் பொன்முடி கூறியுள்ளாா். அந்த துறைமுகம் தனியாா் மயமாக்கப்பட்டதில் இருந்துதான் இப்படி நடைபெறுவதாகக் கூறியுள்ளாா். 1998-ஆம் ஆண்டிலேயே அந்த துறைமுகம் தனியாா்மயமாக்கப்பட்டுவிட்டது அமைச்சருக்குத் தெரியாது போலும்.

போதைப் பொருள் எங்கிருந்து வருகிறது. அதை எப்படி முடக்குவது என்பதை ஆலோசிக்காமல், தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை.

மத்திய அரசின் மேல் பழிபோடுவதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். திமுக அமைச்சா்கள் அவா்கள் நடத்தும் மது ஆலைகளை மூடிவிட்ட பிறகு, மற்றவா்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.