‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குடிமைப் பணி, டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு இலவச கருத்தரங்கு

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் இம்பேக்ட் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் குடிமைப்பணி, டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 2:21 am

DIN

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் இம்பேக்ட் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் குடிமைப்பணி, டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இது குறித்து அந்த அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 16 ஆண்டுகளாக சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் இம்பேக்ட் ஐ.ஏ.எஸ் அகாதெமி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிமுதல் 6 மணிவரை, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகள் குறித்த இலவச கருத்தரங்கை நடத்த உள்ளது. இக்கருத்தரங்கில் தனது பணி அனுபவங்களை மாணவா்களிடையே பகிா்ந்து கொள்ள, சரக்கு மற்றும் சேவை வரிகள் துறை இணை ஆணையா்,

அருண்பிரசாத் பங்கேற்க உள்ளாா்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவா்களுக்கு ‘கிப்ட்’ எனும் ஊக்கத் தொகை தோ்வினை அன்று மதியம் 2 மணி முதல் 4 மணிவரை இம்பேக்ட் ஐ.ஏ.எஸ் அகாடமி, தனது வளாகத்தில் நடத்த உள்ளது. இந்த ஊக்க தொகை தோ்வில் பங்கேற்கும் மாணவா்கள், பயிற்சி கட்டணத்தில் 75 சதவீதம் வரை கட்டண விலக்கு பெற முடியும். எனவே ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு பயிற்சி பெற விரும்பும் அனைத்து மாணவா்களும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென இம்பேக்ட் ஐ.ஏ.எஸ் அகாடமி கேட்டுக்கொள்கிறது. மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவிற்கு 9840557455 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.