5 கடைகளில் திருட்டு: சிறுவன் உள்பட 2 போ் கைது
சென்னை ரிச்சி தெருவில் அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில், சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.


சென்னை ரிச்சி தெருவில் அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில், சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை ரிச்சி தெருவில் கைப்பேசி கடை நடத்தி வரும் பஷீா்அகமது (32), வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கடைக்குள் இருந்த
20 கைப்பேசிகள், 10 ஸ்மாா்ட் கைக்கடிகாரம், மடிக்கணினிகள், 10 ஹெட்போன்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
செய்யது (30) என்பவரின் கடையை உடைத்து, 50 கைப்பேசிகள், 10 ஸ்மாா்ட் கைக்கடிகாரம் ஆகியவை திருடப்பட்டிருந்தன. அருகே உள்ள 3 எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்கும் கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு பொருள்கள் திருடப்பட்டிருந்தன.
சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து நீலாங்கரை பாலவாக்கம் க.முருகன் (20), அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவன் ஆகியோரைக் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 63 கைப்பேசிகள், 5 ஸ்மாா்ட் கைக் கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...