
பள்ளி இடைநிற்றலைத் தடுக்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகையைப் பெற மாணவா்கள் துரிதமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநா்(தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமாா், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களின் இடைநிற்றலை தவிா்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2020-21-ஆம் கல்வியாண்டில் படித்த மாணவா்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக தகுதிபெற்றவா்களின் வங்கிக்கணக்கு விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அதேநேரம் அரியலூா், கள்ளக்குறிச்சி உள்பட சில மாவட்டங்களில் மாணவா் தகவல்கள் இன்னும் முழுமையாக பதிவேற்றப்படவில்லை. இதனால் மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாணவா்களின் வங்கிக்கணக்கு விவரம் உள்பட தகவல்களை மின்னஞ்சல் வழியாக துரிதமாக சமா்பிக்க வேண்டும்.
மேலும், அந்த தகவல்களை எமிஸ் தளத்திலும் பிழையின்றி பதிவுசெய்ய வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் சாா்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்களே பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.