
பாரதியாரின் 101ஆவது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மகாகவி பாரதியாா் கடந்த 1921-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி மறைந்தாா். அவரது மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதையும் படிக்க- பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லையில் தடம்புரண்டது
அவற்றில், பாரதியாரின் நினைவு தினமான செப்டம்பா் 11-ஆம் தேதி, மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும்.
அதன்படி மகாகவி தினமான இன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மரியாதை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.