கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு மக்கள் தர்னா!

கழிப்பிடம் வசதிகள் செய்துதரக்கோரி கொளத்துப்பாளையம் பேரூராட்சி வளாகம் முன்பு புதன்கிழமை மக்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு மக்கள் தர்னா!
Published on
Updated on
1 min read

திருப்பூர்: சுகாதார கழிப்பிடம் வசதிகள் செய்துதரக்கோரி கொளத்துப்பாளையம் பேரூராட்சி வளாகம் முன்பு புதன்கிழமை மக்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி அருகே ராமபட்டினம் எனும் கிராமத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது அங்கன்வாடி பள்ளி சமையலறையை ஒட்டி கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு புறக்கழிப்பிடம் கட்டப்பட்டு வருகின்றன. அங்கு கழிப்பிடம் கட்ட வேண்டாம், குழந்தைகளுக்கு தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் பரவும். ஆகையால் மாற்று இடங்களில் கட்ட வேண்டுமென வலியுறுத்தினர்.

இதுகுறித்து ஆட்சியரிடமும் மனு கொடுத்தனர். கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவி ஆகியோரிடம் வலியுறுத்தினர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து பேரூராட்சி வளாகம் முன்பு புதன்கிழமை மக்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com