கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புரட்டாசி முதல் சனிக்கிழமை: சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத பிறப்பினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றன. 

News image

அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் அருள்மிகு ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளை தரிசிக்க செல்லும் பக்தர்கள்

Updated On :17 செப்டம்பர் 2022, 10:41 am

DIN

புரட்டாசி மாத பிறப்பினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றன. 

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு புரட்டாசி மாத தொடக்கத்தினையொட்டி அதிகாலையிலேயே சுப்ரபாத சேவையுடன் சிறப்பு வழிபாடு தொடங்கியது. 

அதனையடுத்து சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  சிறப்புப் பூஜைகளையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. இப்பூஜைகளில் 900க்கும் மேற்பட்ட பக்தர்கள் புரட்டாசி விரதமிருந்து மலை ஏறிச்சென்று சுவாமிகளை வழிப்பட்டு சென்றனர். 

<strong>மலை மீது உள்ள ஆஞ்சநேயர் சுவாமி</strong>

<strong>மலை மீது உள்ள ஆஞ்சநேயர் சுவாமி</strong>

சங்ககிரி அருள்மிகு சென்னகேவப்பெருமாள் பக்தர்கள் குழுவின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத தொடக்கத்தின் முதல் சனிக்கிழமை மலை மீது உள்ள  அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். 

இந்த வருடம் புரட்டாசி மாதம் செப்டம்பர் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதையொட்டி புரட்டாசி முதல் சனிக்கிழமை செப்.17ம் தேதி முதல் பக்தர்கள் விரதமிருந்து சென்னகேசவப் பெருமாளை வழிபடுவதற்காக செப்டம்பர் 15ம் தேதி வியாழக்கிழமை காலையிலிருந்து மலையடிவாரத்திலிருந்து சுவாமிக்கு தேவையான அபிஷேக, ஆராதனைப் பொருள்கள் மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்திற்குத் தேவையான பொருள்கள், எரிவாயு உருளைகளை தலைமை சுமையாக எடுத்துச் சென்றனர். 

செப்.16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல் பக்தர்கள் மலைக்குச் சென்றனர். செப்டம்பர் 17ம் தேதி சனிக்கிழமை 900க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். மலைக்குச் சென்ற பக்தர்கள் அனைவருக்கும் விழாக்குழுவின் சார்பில் 30வது ஆண்டாக காலை, மதியம் அன்னதானமும், லட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.