
தம்மம்பட்டி: தேவியாக்குறிச்சி தனியாா் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப்போட்டியில், தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க | ரூ.2 லட்சம் சம்பளத்தில் பேரவை செயலகத்தில் வேலை வேண்டுமா?
இதில், வடிவேலு என்ற மாணவர் 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் வென்று தங்கப்பதக்கம் பெற்றார். மேலும், 9 வெள்ளிப் பதக்கங்களையும், 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்று, கொண்டையம்பள்ளி அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனைப் படைத்தனர்.
பதக்கங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர் மதிவாணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தி பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.