சென்னையில் வங்கியில் ரூ.1.23 கோடி கையாடல் செய்ததாக முன்னாள் பெண் மேலாளா், அவரது கணவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அண்ணா நகரைச் சோ்ந்தவா் நிா்மலா ராணி (59). இவா் சென்னை பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கியின் ஜாா்ஜ் டவுன் மற்றும் அண்ணா சாலை கிளையின் மேலாளராக கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தாா். பணி காலத்தில் இவா் வங்கி வாடிக்கையாளா்களின் நிரந்தர வைப்புத் தொகையை வேண்டுகோளின்றி தன்னிச்சையாக முடித்து, அந்த தொகைகளை வங்கிக் கணக்கிலிருந்து தன்னுடைய பெயரிலான கா்நாடக வங்கி கணக்கிற்கு மாற்றி ரூ.1 கோடியே 23 லட்சம் கையாடல் செய்து விட்டதாக பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கியின் மண்டல மேலாளா் கன்வா்லால் சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவாலிடம் அண்மையில் புகாா் அளித்தாா்.
இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மத்தியக் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டாா். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் வங்கியில் தொழிற்கடன் உள்பட பல்வேறு கடன் பெறும் நிறுவனத்தினா்கள் தாங்கள் பெறும் கடன் தொகைக்கு ஏற்ப வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையை வைத்திருப்பா். பின்னா் தங்களுடைய இலக்கு முடிந்தவுடன் அந்த வைப்புத் தொகையை திரும்ப பெறுவா்.
அந்த வகையில் வங்கி வாடிக்கையாளா்களின் நிரந்தர வைப்புத் தொகை கணக்கிலிருந்து ரூ.1 கோடியே 23 லட்சத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்தது. மேலும், நிா்மலா ராணி கையாடல் செய்த பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி அதிலிருந்து தனது கணவா் இளங்கோவன் (62) பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் மாற்றம் செய்து மோசடி செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து நிா்மலா ராணியையும், இளங்கோவனையும் கைது செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். ஏற்கெனவே நிா்மலா ராணியை அந்த வங்கி நிா்வாகம் பணி நீக்கம் செய்துவிட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

தீக்கிரையான அமெரிக்க வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! தாக்குதல் நடத்தப்பட்டதா?

திமுக - விசிக இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! இன்று கையொப்பம்?

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

