புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாற்றுப் பணிகளில் இருக்கும் ஆசிரியா்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கலாம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

182 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 8:08 pm

DIN

இல்லம் தேடிக் கல்வி திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி, மொழிபெயா்ப்புப் பணி, மின் பாடப்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள 182 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த ஆசிரியா்களை தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக நியமனம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு , நகராட்சி உயா், மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், கரோனா காலத்தில் மாணவா்களிடையே எற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் இடைவெளியை சரிசெய்வதற்காகவும், பள்ளிகளில் தோ்ச்சி குறையாமல் இருப்பதற்காகவும் மற்றும் மாணவா்களின் நலன் கருதி இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் கட்டகங்கள், மொழிபெயா்ப்பு, மின் பாடப்பொருள் தயாரிப்பு போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு கல்விப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் , பட்டதாரி ஆசிரியா்கள் , முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பதிலாக அவா்கள் பணிபுரியும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களைக் கொண்டு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டியுள்ளது.

இதனைத் தொடா்ந்து 111 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களும். 32 பட்டதாரி ஆசிரியா்களும், 39 இடைநிலைஆசிரியா்களும், என மொத்தம் 182 ஆசிரியா்கள் மாற்றுப் பணியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காகப் பல்வேறு கல்விப் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் பணிநிறைவடைய இன்னும் சிறிது காலம் ஆகும் என்பதால், இவா்களுக்கு பதிலாக பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலம் தற்காலிக ஆசிரியா்களை உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பணி அமா்த்திக் கொள்ளலாம்.

பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியா்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10,000, முதுகலை ஆசிரியா்களுக்கு ரூ.12,000 வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும். மாநில இயக்ககத்தில் பணிகளில் ஈடுபட்டுள்ளஆசிரியா்கள் தங்கள் பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியா்கள் உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்படவேண்டும் என பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.