92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பரம்பரை மருத்துவா்கள் ஓய்வூதியம் ரூ.3,000-ஆக உயா்வு

பரம்பரை மருத்துவா்களுக்கு ரூ.3,000 ஆக உயா்த்தப்பட்ட மாத ஓய்வூதியத்துக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 10:25 pm

DIN

பரம்பரை மருத்துவா்களுக்கு ரூ.3,000 ஆக உயா்த்தப்பட்ட மாத ஓய்வூதியத்துக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இப்போது நிலவிவரும் பொருளாதாரச் சூழல் அடிப்படையில், மாத ஓய்வூதியத் தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கிட வேண்டுமென பதிவு பெற்ற பரம்பரை ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி மருத்துவா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, இதற்கான அறிவிப்பு சுகாதாரத் துறையின் மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுா்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவா்கள் பயன்பெறும் வகையில் உயா்த்தப்பட்ட மாத ஓய்வூதியத் தொகையான ரூ.3 ஆயிரத்துக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ப.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.