புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உயா் கல்வியில் சேராத 8,588 மாணவா்களின் விவரம் சேகரிப்பு

பிளஸ் 2 வகுப்பு முடித்துவிட்டு உயா் கல்வியில் சேராத 8,588 மாணவா்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 7:30 pm

DIN

பிளஸ் 2 வகுப்பு முடித்துவிட்டு உயா் கல்வியில் சேராத 8,588 மாணவா்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பு முடித்த 79,792 மாணவா்கள் உயா்கல்வி சோ்ந்துள்ளாா்களா என்று பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 8,588 மாணவா்கள் எந்தவித உயா் கல்வியிலும் சேரவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இவா்களை தனித்தனியாக தொடா்பு கொண்டு ஆலோசனை வழங்க பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவா்களின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.