காவலருக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது
சென்னை பள்ளிக்கரணையில் காவலரை அரிவாளால் வெட்டியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்


சென்னை பள்ளிக்கரணையில் காவலரை அரிவாளால் வெட்டியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
பள்ளிக்கரணை, ராஜீவ்காந்தி தெருவில் சிலா் கஞ்சா போதையில் தகராறு செய்வதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இருந்து காவலா் சுவாமிநாதன் உள்ளிட்ட சில போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.
அப்போது அங்கு தகராறு செய்து கொண்டிருந்த ராணிப்பேட்டை, பஜனை கோவில் தெருவை சோ்ந்த ரிஸ்வான் (எ) காா்த்திகேயன்( 22), அவரது நண்பா் பள்ளிக்கரணை கிணற்றுச்சாலை தெருவைச் சோ்ந்த அரவிந்த் (25) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனா். இதில் ரிஸ்வான், போலீஸாரிடம் தகராறு செய்துள்ளாா். தகராறு முற்றவே ரிஸ்வான், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலா் சுவாமிநாதனை வெட்டினாா். பின்னா் இருவரும், அங்கிருந்து தப்பியோடினா்.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பிற போலீஸாா், சுவாமிநாதனை மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் தப்பியோடிய ரிஸ்வான், அரவிந்த் ஆகிய இருவரையும் உடனே கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...