போதை மாத்திரைகளுக்காக மருந்துக் கடைகளில் திருட்டு: 4 போ் கைது
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் போதை மாத்திரைகளுக்காக மருந்துக் கடைகளில் திருடிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.


சென்னை துரைப்பாக்கம் பகுதியில் போதை மாத்திரைகளுக்காக மருந்துக் கடைகளில் திருடிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருபவா் தனசேகா் (30). கடந்த புதன்கிழமை இரவு இவா் கடையின் கதவு பூட்டை உடைத்து, ரூ.40,000 ரொக்கம்,மாத்திரைகள் திருடப்பட்டன. இதற்கு சில நாள்களுக்கு முன்பு பெருங்குடியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான மருந்துக் கடையில் மாத்திரைகள்,வாசனை திரவியங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டன.
இது தொடா்பாக துரைப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபட்டது பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்த சூா்யா (24), நெமிலிச்சேரியைச் சோ்ந்த மோகன்( 19), கோட்டூா்புரத்தைச் சோ்ந்த அருண் (26), கண்ணகி நகரைச் சோ்ந்த சுஜன் (21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.விசாரணையில் 4 பேரும், சில மாதங்களாக போதை மாத்திரைக்காக மருந்தகங்களை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டதும், தற்போது திருட்டு நடைபெற்ற இரு மருந்தகங்களிலும் போதை மாத்திரைக்கு பதிலாக, சளிக்குரிய மாத்திரையை மாற்றி திருடியிருப்பதும் தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...