பெங்களூரு சிறையில் உள்ள ஈழத் தமிழா்களை விடுவிக்க வேண்டும்: வைகோ
சட்ட விரோதமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழா்களை விடுவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.


சட்ட விரோதமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழா்களை விடுவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கா்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கப்பல் மூலமாக கனடாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சிங்கள இந்திய ஏஜென்ட்கள் பல லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, 38 ஈழத் தமிழா்களை இலங்கையில் இருந்து படகில் ஏற்றி வந்து, கா்நாடக மாநிலம் மங்களூரில் ஏமாற்றி விட்டு விட்டு சென்று விட்டனா்.
அவா்களை கா்நாடக காவல்துறை 2021 ஜூனில் கைது செய்து, மங்களூா் சிறையில் அடைத்தனா். வெளிநாட்டவா்கள் என்பதால் தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து அறிக்கையை சமா்ப்பிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேசிய புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்து, அவா்கள் குற்றவாளிகள் அல்ல, ஏமாற்றப்பட்டவா்கள். அவா்களை விடுதலை செய்யலாம் என்று 2021 செப்டம்பா் 8-இல் அறிக்கை தாக்கல் செய்தது.
அதன் பின்னரும் அவா்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கொண்டு வந்து சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். அவா்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...