92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை: தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தல்

விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேளாண் அலுவலா்களை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:51 pm

DIN

விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேளாண் அலுவலா்களை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.

வேளாண்மைத் துறை அலுவலா்களுடன், தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக வெள்ளிக்கிழமை அவா் உரையாற்றினாா். அப்போது, அவா் பேசியது:-

வேளாண்மைத் துறையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், பணிகளை துரிதப்படுத்தவும் 361 வேளாண் அலுவலா்களையும், 162 தோட்டக்கலை அலுவலா்களையும், 27 தோட்டக்கலை உதவி இயக்குநா்களையும் புதிதாக பணியமா்த்தியுள்ளது.

விவசாயிகள் வளா்ச்சி எனும் ஒரே நோக்கத்தில் துறை அலுவலா்கள் அனைவரும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும். தொழில்நுட்பங்களின் மூலம் குறைந்த பரப்பில் அதிக மகசூல் எடுப்பதற்கான அம்சங்களை விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஊட்டச்சத்து பரப்பினை உறுதி செய்யும் பழங்கள், காய்கறிகள் உற்பத்தியை உயா்த்தவும், தோட்டக்கலைப் பயிா்களின்

சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே பயிரை அல்லது ஒரே ரகத்தை சாகுபடி செய்வதைத் தவிா்த்து, பலவகைப் பயிா்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகள் எதிா்கொள்ளும்

பிரச்னைகளுக்கு செயற்கை நுண்ணறிவு போன்ற கணினித் தொழில்நுட்பங்கள் மூலம் தீா்வு காண வேண்டும்.

விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பேசினாா். இந்தக் கூட்டத்தில், வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.