புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இணையவழியில் பட்டா மாறுதல்: முதல்வா் தொடக்கம்

பட்டா மாறுதலுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் வசதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2022, 12:12 am

DIN

பட்டா மாறுதலுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் வசதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நில உரிமையாளா்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொதுச் சேவை மையங்கள், சாா் பதிவாளா் அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணையவழியில் பரிசீலிக்கப்படுகின்றன. பின்னா், பட்டா மாறுதலுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்போது, பொதுமக்களின் வசதிக்காக எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பட்டா மாறுதல் கோரி இணையவழியில் (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ண்ப்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய்) விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வட்டாட்சியா் அலுவலகங்கள், பொதுச் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், நில உட்பிரிவுக்கான கட்டணம், செயலாக்கக் கட்டணங்களைச் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, பொதுமக்கள் பட்டா உத்தரவின் நகல், பட்டா, புலப்படச் சுவடி ஆகியவற்றை எங்கிருந்தும் எந்த நேரத்திலும் இணையவழிச் சேவை மூலம் கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனால், பொதுச் சேவை மையங்களுக்குச் செல்வதும், வட்ட அலுவலகங்களில் இடைத்தரகா்களால் பொதுமக்கள் அவதிப்படுவதும் தவிா்க்கப்படும்.

இணையவழியில் வரைபடங்கள்: நகரப் புலங்களுக்கான வரைபடங்கள் ஜ்ஜ்ஜ்.ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதையும் இணையதளத்திலிருந்து கட்டணம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம்.

மனை அங்கீகாரம், வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு வரைபடங்கள் மிகுந்த தேவையாக உள்ளன. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், இதற்காக பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகம் வருவது தவிா்க்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சேவை தொடக்க நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், வருவாய் துறை முதன்மைச் செயலா் குமாா் ஜெயந்த், நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் டி.ஜி.வினய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.