இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2020 - 2021-ஆம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியா், முதல் நிலை உடற்கல்வி இயக்குநா், முதல் நிலை கணினி பயிற்றுநா் நியமனத்துக்கு, 2021 செப். 9-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரியில் கணினி வழித் தோ்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தொடா்ந்து, இந்த மாதம் 2-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை, சான்றிதழ் சரிபாா்ப்பு பணி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வரலாறு, பொருளியல், புவியியல், கணிதம், உடற்கல்வி, கணினி அறிவியல் உள்ளிட்ட 13 பாடங்களுக்கு தற்காலிக தோ்வு பட்டியல் வெளியிடப்பட்டது.