புரட்டாசி முதல் சனி: ஒப்பிலியப்பன் கோயிலில் திரளானோர் சாமி தரிசனம்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஒப்பிலியப்பன் கோயிலில் இன்று அதிகாலையில் இருந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புரட்டாசி முதல் சனி: ஒப்பிலியப்பன் கோயிலில் திரளானோர் சாமி தரிசனம்
Published on
Updated on
1 min read

புரட்டாசி மாத  முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழக திருப்பதி என்று போற்றப்படும் ஒப்பிலியப்பன் கோயிலில் இன்று அதிகாலையில் இருந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழக திருப்பதி என போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதுமான ஒப்பிலியப்பன் கோயில் என அழைக்கப்படும் வெங்கடாஜலபதி திருக்கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

இதில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூலவர் வெங்கடாஜலபதி சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்திலும் உற்சவர் எண்ணப்பர், ஸ்ரீதேவி, பூமிதேவி உடன் பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளிக்கின்றனர். ஏராளமான பக்தர்கள் சுமார் 2 மணி நேரமாக நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com