தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

மஹாளய அமாவாசை: சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்

தேனி மாவட்டம் சுருளி அருவியில் மஹாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று ஆயிரக்கணக்கான  பக்தர்கள் நீராடி முன்னோர் வழிபாடு செய்தனர்.

News image
Updated On :25 செப்டம்பர் 2022, 7:18 am

கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் மஹாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று ஆயிரக்கணக்கான  பக்தர்கள் நீராடி முன்னோர் வழிபாடு செய்தனர்.

ஆண்டு தோறும் வரும் அமாவாசை புரட்டாசி மாதத்தில் வரும்போது மஹாளய அமாவாசை மிகவும் புனிதமாகவும், அன்று முன்னோர் வழிபாடுகள் செய்வது சிறப்பாகும். மஹாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஆண், பெண் பக்தர்கள் சுருளி அருவி வளாகத்தில் குவிந்தனர். 

குளிக்க அனுமதி

கடந்த 50 நாட்களாக தூவானம் அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீரை திறந்து விட்டதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மஹாளய அமாவாசை  என்பதால் அணையிலிருந்து தண்ணீர் அளவாக திறக்கப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் குளிக்க, ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் அனுமதியளித்தனர்.

Story image

அதன்பேரில் பக்தர்கள் அதிகாலையிலிருந்தே நீராடினர். அடிவாரத்தில் உள்ள வளாகத்தில் சுருளியாற்றங்கரையில் இறந்த முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர். அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்டவைகளை வழங்கினர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டது. கம்பம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பக்தர்கள் வந்த வாகனங்கள் தனியாக நிறுத்தப்பட்டது. ராயப்பன்பட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.