திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்

திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்

திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
சென்னையில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஆற்றிய உரை, தொழில்துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற அடிப்படையில் துபைக்கு சென்று வந்தேன். மாநிலத்தின் உரிமைகளை உரிமையோடு கேட்க வேண்டும் என்பதற்காக தலைநகரம் தில்லிக்கு சென்று வந்தேன். ஒரு காலத்தில் திரைப்பட தயாரிப்பில் இருந்தவன் நான். ஒருசில படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். 

திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழ்நாடு. திரைப்பட விருதுகள் மூலம் தகுதியானவர்கள் பாராட்டப்பட வேண்டும். திறமைசாலிகள் மதிக்கப்பட வேண்டும். கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, திரையுலகம் மீண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையுலகிற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. குட்கா, கஞ்சா குறித்த விழப்புணர்வு வாசகங்களை படங்கள் திரையிடும்போது வெளியிட வேண்டும். 
சமூகத்துக்கு பயன் அளிக்கக்கூடிய முற்போக்கான திரைப்படங்களை எடுக்க வேண்டும். பொழுதுப்போக்கு ஊடகம் என்ற நிலை மாறி சிந்தனைக்கான ஊடகம் என்ற நிலையை நோக்கி ஊடகங்கள் வளர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ஜெயம்ரவி, ஜெயராம், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com