ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: ஆணையத்தின் பதில்?

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்


ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கரோனாவுக்குப் பிறகு தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பலர் அரசுப் பள்ளிகளிலும், ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளிலும் சேர்ந்துள்ளனர். 

இந்நிலையில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கும் நிலை உள்ளது. அப்பள்ளிகளில் 70 முதல் 110 மாணவர்கள் வரை பயில்கின்றனர்.   
 
தமிழக அளவில் 1,100 ஆதி திராவிட நலப் பள்ளிகள் உள்ளது, அதில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் பயின்று வரும் நிலையில் பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது.

இதனால் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 5ஆம் தேதி இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆதிதிராவிடர் நல ஆணையகம் பதிலளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com