நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு

‘தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட சாலை’: புதிய அறிவிப்புகள்

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று அறிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணிகள், சிறுதுறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைகளில் அமைச்சர் எ.வ. வேலு வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

1. சென்னை அண்ணா சாலையில் 5 குறுக்குசாலைகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வண்ணம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை ரூ. 450 கோடியில் அமைக்கப்படும்.

2. செங்கல்பட்டு நகரத்தை திருச்சி, மானாமதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் துறைமுகச் சாலையை 4 வழிச் சாலையாக அமைக்க ரூ. 4 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

3. முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 150 கி.மீ. நான்கு வழிச்சாலைகளாகவும், 600 கி.மீ. இருவழித் தடமாகவும் அமைக்க ரூ.  2,300 கோடியில் மேம்படுத்தப்படும்.

4. சென்னை மாநகரப் பகுதிகளில் 4 இடங்களில் நகரும் படிக்கட்டுகளுடன் மேம்பாலம் அமைக்க ரூ. 56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

5. உதகைக்கு நகருக்கு மாற்று பாதை ரூ. 70 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com