வாகன ஓட்டுநர் உரிமத்தை இணையதளம் மூலம் புதுப்பிக்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே சேவைகள் பெறும் வசதியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார். 
ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம் ஆகிய சேவைகளை இணையதளம் மூலம் பெறும் வசதியை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம் ஆகிய சேவைகளை இணையதளம் மூலம் பெறும் வசதியை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே சேவைகள் பெறும் வசதியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார். 

ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தி பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே போக்குவரத்து சேவைகளைப் பெறலாம் என சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரியை மாற்றுதல் ஆகிய சேவைகளை இணையதளம் வாயிலாகப் பெறலாம். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதன்மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவை எளிதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் விரைவாக செயல்படுத்தப்படுவதோடு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் வரும் சிரமம் குறையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம் ஆகிய சேவைகளை இணையதளம் மூலம் பெறும் வசதியை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com