மட்டப்பாறை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய திருவிழா:  பிடி மண் கொடுத்து திருவிழா தேதி நிர்ணயம்

மணப்பாறை அடுத்த மட்டப்பாறை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய திருவிழா சகுனம் பெற்று தொடங்கப்பட்ட நிலையில், பிடி மண் கொடுத்து வைகாசி 17- இல் காப்பு காட்டுதலுடன் திருவிழா தொடக்கம்
மட்டப்பாறை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய திருவிழாவுக்கு பிடி மண் கொடுத்து திருவிழா தேதி நிர்ணயம்.
மட்டப்பாறை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய திருவிழாவுக்கு பிடி மண் கொடுத்து திருவிழா தேதி நிர்ணயம்.

மணப்பாறை அடுத்த மட்டப்பாறை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய திருவிழா சகுனம் பெற்று தொடங்கப்பட்ட நிலையில், பிடி மண் கொடுத்து வைகாசி 17- இல் காப்பு காட்டுதலுடன் திருவிழா தொடக்கம் என தேதி நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பின் திருவிழா நடைபெறுவதால் 53 கிராம மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மட்டப்பாறை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் திருவிழா 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். 53 கிராம மக்கள் வழிபாட்டு ஸ்தலமாக இருந்து வரும் இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 

கடந்த 2015-ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது நிகழாண்டு திருவிழாவிற்கு கடந்த வாரம் சகுனம் பெற்று தொடங்கப்பட்ட நிலையில், பிப் 12 செவ்வாய்க்கிழமை இரவு பிடி மண் கொடுத்து திருவிழா தேதிகள் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

திருவிழாவினை முன்னிட்டு வண்ண மின்விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டிருந்த ஆலயத்திற்கு மட்டபாறை பெரிய பூசாரி, பிச்சை ரெட்டியப்பட்டி காளி பூசாரி, பொன்னையா கவுண்டம்பட்டி மற்றும் நடுப்பட்டி கருப்பசாமி பூசாரிகள் என ஆலயத்தின் பூசாரி முறையினர் தனித்தனியாக தாரைத்தப்பட்டைகள் முழங்க மறுள் ஆடி ஆலத்திற்கு வந்தனர். அவரவர் கொண்டு வந்த படைகளன்கள் பத்திரகாளியம்மன் முன்பும், கருப்பசாமி முன்பு வைக்கப்படுகிறது. பின் நால்வரும் ஒன்றிணைந்து பலிபீடத்திற்கு சென்று மீண்டும் ஆலயத்திற்குள் வந்தடைந்தனர். 

பின் 53 கிராம மக்களின் பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் ஆலயத்தில் அமர்ந்து கூடி பேசி, வைகாசி 17-இல் காப்பு காட்டுதலுடன் திருவிழா தொடங்கப்படுவதாகவும், 31-இல் கரகம் பாலித்தல் தொடங்கி ஆனி 4-இல் கரகம் களைவதாகவும் முடிவு செய்யப்பட்டது. 

தேதி நிர்ணயம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து, மூலவரிடமிருந்து கொண்டு வரப்பட்ட பிடி மண் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் முறைக்காரர்கள் கொடுத்தும், பெற்றும் கொண்டனர். ஏழு ஆண்டுகளுக்கு பின் திருவிழா நடைபெறுவதால் 53 கிராம மக்கள் வான வேடிக்கைகள் நிகழ்த்தி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com