மருத்துவப் படிப்பு காலி இடங்களைத் திரும்பப் பெற ஓபிஎஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் சார்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத மருத்துவப் படிப்பு காலி இடங்களை மீண்டும் பெற தமிழக அரசை ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் (கோப்புப்படம்)
ஓ.பன்னீர்செல்வம் (கோப்புப்படம்)

தமிழ்நாடு அரசின் சார்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத மருத்துவப் படிப்பு காலி இடங்களை மீண்டும் பெற தமிழக அரசை ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ படிப்புகளில் நிரப்பப்படாத காலியிடங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக வெள்ளிக்கிழமை அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்பில் இரண்டாவது கலந்தாய்வு முடிந்தவுடன் மத்தியக் கலந்தாய்வுக் குழுவினால் நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இருப்பினும் இந்த ஆண்டு மருத்துவச் சேர்க்கைக்கான இறுதிநாள் முடிந்த பிறகும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிரப்பப்படாத இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு இன்னும் திருப்பி அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்டு நான்கு கலந்தாய்வுகளுக்குப் பின்பும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், அந்த இருக்கைகளை மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற்று, அவற்றை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மருத்துவம் பயில வேண்டுமென்ற ஆர்வம்கொண்ட தகுதியுடையோர் மத்தியில் நிலவுகிறது.

எனவே அகில இந்திய ஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மத்திய அரசிடமிருந்து பெறாவும் அவற்றை தமிழ்நாட்டை சேர்ந்தோருக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கவும் கேட்டுக் கொள்வதாக தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com