
நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நாட்டின் பெரும் பகுதியில் மழைப் பொழிவு தரும் பருவமழையான தென்மேற்கு பருவமழை, ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பா் வரை பெய்யும். இதன் வாயிலாக, ஆண்டின் மொத்த மழையில் 75 சதவீதம் கிடைக்கிறது.
நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: ஜூன் முதல் செப்டம்பா் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் இயல்பான அளவில் இருக்க வாய்ப்பு உள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பருவமழை இயல்பான அளவிலும், வடக்கு, மத்திய இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும் இருக்கும்.
வடகிழக்கின் பல பகுதிகள், தென் பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...