கருத்து சுதந்திரம் சிலருக்கு மட்டும்தானா? இளையராஜாவுக்கு தமிழிசை ஆதரவு

பிரதமர் நரேந்திர மோடியை சட்டமேதை அம்பேத்கருடன் ஒப்பிட்ட விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கருத்து சுதந்திரம் சிலருக்கு மட்டும்தானா? இளையராஜாவுக்கு தமிழிசை ஆதரவு


பிரதமர் நரேந்திர மோடியை சட்டமேதை அம்பேத்கருடன் ஒப்பிட்ட விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி கடந்த 14-ம் தேதி அம்பேத்கரும் மோடியும் என்ற நூல் வெளியானது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையையொட்டி இருப்பது போன்ற கருத்துகளை இளையராஜா அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, இளையராஜாவின் ஒப்பீடுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. இதையொட்டி, இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். 

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?

கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம்.

விழித்துக்கொள் தமிழகமே !!!!"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com