
தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதில், தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மேகாலயா மாநில சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்ற துயரச் செய்திகேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க- சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்: 4 காவலர்கள் படுகாயம்
83ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, விஷ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள் அசாம் மாநிலம் கௌகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களுடைய கார், ரிபோயி என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது.
இந்த சம்பத்தில் தமிழக வீரர் விஷ்வா தீனதயாளன் மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த மேலும் 3 வீரர்கள் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2022 ஜனவரியில் தேசிய தரவரிசை போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பட்டத்தை வென்றவர் தீனதயாளன். அவரது மறைவுக்கு மேகாலயா முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...