பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

‘தமிழகத்தில் மின்வெட்டு இல்லை; இனியும் இருக்காது’: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை எனவும் இனிவரும் காலங்களில் மின்வெட்டு இருக்காது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேரவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

Updated On :18 ஏப்ரல் 2022, 12:31 pm

DIN

தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை எனவும் இனிவரும் காலங்களில் மின்வெட்டு இருக்காது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேரவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கோடை காலத்தில் மின்சார தேவை குறித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு விளக்கம் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் பேசியதாவது:

கோடை காலத்தில் தேவைப்படும் மின் தேவையை கருத்தில் கொண்டு அனல்மின் நிலையங்களில் பற்றாக்குறையை போக்க 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டதை தொடர்ந்து, ஓரிரு நாள்களில் அந்த நிலக்கரி வந்துவிடும்.

தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் மின் பற்றாக்குறை 2,500 மெகாவாட்டாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆகையால், தேவையை பூர்த்தி செய்ய 3,000 மெகாவாட் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது மின்விநியோகம் சீராக உள்ளது. மின்வெட்டு தற்போது இல்லை. இனி வரும் காலங்களிலும் மின்வெட்டு இருக்காது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.