
2017ல் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக்கோரி மதுரையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம்
2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 24 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த 2017ல் போராட்டங்கள் வெடித்தன. அந்த நேரத்தில், மதுரை செல்லூர் ரயில் மேம்பாலத்தில் ரயிலை நிறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...