
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆசி பெற்றார்.
இந்த ஆதீனத்தை 14ம் நூற்றாண்டில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாயமூர்த்தி சுவாமிகள் தோற்றுவித்தார். ஆதீனத்தின் 24வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இந்திய அளவில் பெரிய ஆதீனமான இவ்வாதீனத்தின் கீழ் 80 கோயில்கள், 7 பள்ளிகள் உள்ளதுடன், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் 60 சைவ சித்தாந்த பயிற்சி மையங்கள் மற்றும் 60 திருமுறை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளை இன்று (19.04.2022) தலைமை மடத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் நினைவுப் பரிசு வழங்கினார். முன்னதாக ஆளுநருக்கு ஆதின வாசலில் ஆதீன கட்டளை தம்பிரான் வேலப்ப சுவாமிகள் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, ஆதீனத்தின் பொது மேலாளர் ஆர்.திருமாறன், கண்காணிப்பாளர்கள் குருமூர்த்தி, சண்முகம், கண்ணன், காசாளர் சுந்தரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...