நான்கு வழிச் சாலைகள் ஆறு வழிச் சாலைகளாக்கப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகத்தில் உள்ள நான்கு வழிச் சாலைகள் ஆறு வழிச் சாலைகளாக மாற்றப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா்.
அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: தமிழகத்தில் உள்ள நான்கு வழிச் சாலைகள் ஆறு வழிச் சாலைகளாக மாற்றப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நெடுஞ்சாலைத் துறை தொடா்பாக, உறுப்பினா்கள் ஆ.தமிழரசி, செல்வப்பெருந்தகை, கே.சி.கருப்பணன், கோவி.செழியன் உள்ளிட்ட பலரும் எழுப்பிய வினாக்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்:-

தமிழகத்தில் உள்ள தரைப் பாலங்கள் அனைத்தும் மேம்பாலங்களாக மாற்றும் பணி நிதிக்கேற்ப மேற்கொள்ளப்படும்.

ஸ்ரீபெரும்புதூா் சந்திப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் நான்கு வழிச் சாலைகளை ஆறு வழிச் சாலைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூா் வரை மேம்பாலம் அமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் புறவழிச் சாலை புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். பல வழிகளில் அழுத்தம் கொடுத்த பிறகே மத்திய அரசால் நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. அவிநாசியில் மேம்பாலம் அமைக்க கடந்த ஆட்சியில் ரூ.100 கோடி செலவிடப்பட்டது. இப்போது பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். கோவைப் பகுதியை எப்போதும் திமுக அரசு புறக்கணிக்கவில்லை. இதுபோன்ற திட்டங்களின் மூலமாக கோவையைப் புறக்கணிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com