கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் 2-வது நாளாக விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வி.கே.சசிகலாவிடம் இரண்டாவது நாளாக இன்று விசாரணை தொடங்கியது. 
கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் 2-வது நாளாக விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வி.கே.சசிகலாவிடம் இரண்டாவது நாளாக இன்று விசாரணை தொடங்கியது. 

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. 

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவின் காா் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். 

5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

சசிகலாவிடம் விசாரணை 

இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 

சசிகலாவிடம் தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலாவின் வீட்டில் வைத்து, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நீலகிரி எஸ்.பி. ஆஷிஷ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன், பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் என 8 பேர் கொண்ட தனிப்படை குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com