
தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை(ஏப். 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுநிலைப் பள்ளிகளில் மேலாண்மைக்குழு அமைக்கப்பட உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலாண்மைக்குழு கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்துகொள்ளவிருப்பதால் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கோடை வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.