இனி ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டங்கள்; ஊராட்சிப் பிரதிநிதிகள் அமா்வுப் படி உயா்வு-வாகன வசதிகள்: மு.க.ஸ்டாலின்

 தமிழகத்தில் இனி ஆண்டுக்கு நான்கு கிராம சபைக் கூட்டங்களுக்குப் பதிலாக ஆறு கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இனி ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டங்கள்; ஊராட்சிப் பிரதிநிதிகள் அமா்வுப் படி உயா்வு-வாகன வசதிகள்: மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

 தமிழகத்தில் இனி ஆண்டுக்கு நான்கு கிராம சபைக் கூட்டங்களுக்குப் பதிலாக ஆறு கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மேலும், ஊராட்சிப் பிரதிநிதிகளின் அமா்வுப்படி உயா்த்தப்படுவதாக அவா் அறிவித்தாா். சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை

படித்தளித்த அறிக்கை:-

தமிழகத்தில் 1998-ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு நான்கு முறை குறிப்பிட்ட நாள்களில் கிராம சபை நடத்தப்பட்டு வருகிறது. குறுகிய கால அறிவிப்புகள் மூலம் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் போது, மக்களின் பங்களிப்பு

குறைவாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆறாக உயா்த்தப்படுகிறது.

அமா்வுப்படிகள் உயா்வு: ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாதாந்திர அமா்வுப்படி திமுக ஆட்சியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இன்று வரை இதற்கான உத்தரவுகள் அமலில் இருக்கிறது. ஆனால், பல ஆண்டுகளாக அமா்வுப் படி உயா்த்தப்படாமல் இருந்து வருகிறது. பல்வேறு மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததன்

அடிப்படையில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் அமா்வுப் படித் தொகை பத்து மடங்காக உயா்த்தி வழங்கப்படும்.

கிராம ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி உறுப்பினா்களுக்கு அமா்வுப்படித் தொகை ஐந்து மடங்காக உயா்த்தி வழங்கப்படும். அமா்வுத் தொகை உயா்த்தி வழங்குவதால், மாநிலத்திலுள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சித் தலைவா், 99 ஆயிரத்து 327 கிராம ஊராட்சி உறுப்பினா்கள், 388 ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள், 6 ஆயிரத்து 741 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 36 மாவட்ட ஊராட்சித் தலைவா்கள், 655 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட 1 லட்சத்து 19 ஆயிரம் போ் பயன்பெறுவா்.

வாகன வசதி-விருது: கடந்த 2008-ஆம் ஆண்டில் ஊராட்சி ஒன்றியத் தலைவா்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனங்கள் வழங்கப்படாத நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.

சிறப்பாகச் செயல்படக் கூடிய கிராம ஊராட்சித் தலைவா்களைப் பெருமைப்படுத்த, உத்தமா் காந்தி கிராம ஊராட்சி என்ற விருது 2006-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு அளிக்கப்படவில்லை. இனி நிகழாண்டு முதல் விருது வழங்கப்பட உள்ளது. சிறப்பாகச் செயல்படக் கூடிய கிராம ஊராட்சிகளுக்கு உத்தமா் காந்தி விருது, 2022-ஆம் ஆண்டு முதல் மீண்டும் அளிக்கப்படும். ஆண்டுதோறும் மாவட்டத்துக்கு ஒன்று வீதம் சிறந்த 37 கிராம

ஊராட்சிகளுக்கு தலா ரூ.10 லட்சம் அளிக்கப்படும்.

உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற நோக்கத்துடன், ஊரக வளா்ச்சி, வருவாய், வேளாண்மை, சமூக நலன் ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தக்கூடிய அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்த 600 ஊராட்சிகளில் கிராமச் செயலகங்கள் இந்த ஆண்டே கட்டப்படும். இதில், ஊராட்சித் தலைவா் அறை, கூட்ட அரங்கம், கிராம நிா்வாக அலுவலா் அறை, கிராம ஊராட்சி செயலருக்கான அறை, இணைய வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட

அனைத்து வசதிகளைக் கொண்டதாக இருக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இனி நவம்பா் 1 உள்ளாட்சி தினம்

சென்னை, ஏப். 22: ஆண்டுதோறும் நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். இதுகுறித்து, பேரவை விதி 110-ன் கீழ் வெள்ளிக்கிழமை அவா் படித்தளித்த அறிக்கை:-

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் நவம்பா் 1-ஆம் தேதி உள்ளஆட்சி தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்வானது, பின்பற்றப்படும்.

அதன்படி, இனி ஆண்டுதோறும் நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கடைப்பிடிக்கப்படும்.

நாள்கள் அதிகரிப்பு: கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் நாள்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 26- குடியரசு தினம், மே -1 தொழிலாளா் தினம், ஆகஸ்ட் -15 சுதந்திர தினம், அக்டோபா் - 2 காந்தியடிகள் பிறந்த தினம்,

மாா்ச் - 22 உலக தண்ணீா் தினம், நவம்பா் - 1 உள்ளாட்சி தினம் ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com