

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 57-ஆக உயா்ந்தது. கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயா்ந்திருப்பதையடுத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதிதாக தொற்று கண்டறியப்பட்டவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கும், செங்கல்பட்டில் 5 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் மூவருக்கும், மதுரை, திருநெல்வேலியில் தலா இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. மருத்துவமனைகள், வீடுகளில் 286 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.