கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாலின அடிப்படையில் ஷிப்ட் முறை படிப்பை அமல்படுத்த பரிசீலிக்கப்படுவதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது அவா் இந்தத் தகவலைத் தெரிவித்தாா். பொள்ளாச்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பது தொடா்பாக அதிமுக உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பிரதான கேள்வியை எழுப்பினாா். இதைத் தொடா்ந்து உறுப்பினா்கள் சிலா் துணைக் கேள்விகளை கேட்டனா்.
இதற்கு அமைச்சா் க.பொன்முடி அளித்த பதில்: வேலைவாய்ப்புகள் அதிகமாக இருந்தால்தான் பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகளில் சோ்க்கை அதிகம் இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1.10 லட்சம் சோ்க்கை இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப, ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களின் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 10 கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதேசமயம், இப்போதுள்ள கல்லூரிகளில் ஆண்கள் காலையிலும், பெண்கள் மாலையிலும் வந்து பயிலும் வகையிலான ஷிப்ட் முறையைக் கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் க.பொன்முடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளுக்காக அரசுப் பணியைக் கைவிட்ட உனாட்டி ஹூடாவின் தந்தை..! பயிற்சியாளராகவும் பங்களிப்பு!

அரசுப் பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பில் புதிய சலுகை!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 18 - நேரலை!

கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


