கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வாய்ப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி பழனிசாமியை விசாரணைக்கு அழைக்கும் தேதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த தனிப்படை காவல்துறை திட்டமிட்டிருப்பதாகவும் அந்த தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, கொடநாடு கொலை,கொள்ளை வழக்குத் தொடா்பாக சசிகலாவிடம் தனிப்படை காவலர்கள் இரு நாள்கள் விசாரணை செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக வி.கே.சசிகலாவிடம் சென்னை தியாகராயநகா் அபிபுல்லா சாலையில் உள்ள அவரது வீட்டில் காவலர்கள் வியாழக்கிழமை 6 மணி நேரம் விசாரணை செய்திருந்த நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

கொலை, கொள்ளை தொடா்பாக அரசியல் பிரமுகா்கள் யாா் மீதேனும் சந்தேகம் உள்ளதா, கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறதா போன்ற கேள்விகளை சசிகலாவிடம் காவல் துறையினா் கேட்டுள்ளனா். அதற்கெல்லாம் சசிகலா தெளிவான பதிலை பதிவு செய்துள்ளாா்.

விசாரணையின்போது சசிகலாவின் வழக்குரைஞா் ராஜா செந்தூா்பாண்டியன் உடன் இருந்தாா். அவா் அளித்த பேட்டி: இந்த விவகாரத்தில் கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் என காவல்துறையிடம் விசாரணையின்போது சசிகலா தெரிவித்துள்ளாா். காவல்துறை விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவே சசிகலா நம்புகிறாா் என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com