'பச்சப் புள்ள பாவம்': குட்டியை வழிநடத்தும் யானைகள் - வைரல் விடியோ

விவசாய நிலப் பகுதிக்குள் நுழைந்த யானைக் கூட்டத்தில் இருந்த குட்டியானை, மின் ஒயரை மிதிக்காமல் கடந்து செல்ல பெரிய யானைகள் உதவிய விடியோ அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
'பச்சப் புள்ள பாவம்': குட்டியை வழிநடத்தும் யானைகள் - வைரல் விடியோ
'பச்சப் புள்ள பாவம்': குட்டியை வழிநடத்தும் யானைகள் - வைரல் விடியோ

கோவை மாவட்டத்தில் நரசிபுரம் அருகே, விவசாய நிலப் பகுதிக்குள் நுழைந்த யானைக் கூட்டத்தில் இருந்த குட்டியானை, மின் ஒயரை மிதிக்காமல் கடந்து செல்ல பெரிய யானைகள் உதவிய விடியோ அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

அந்த விடியோவில், ஐந்து யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி விவசாயப் பகுதிக்குள் நுழைந்துவிட்டன. அங்கிருந்து வெளியேறும் போது, முதலில் இரண்டு யானைகள் சூரிய மின்சக்தி ஒயரை தாண்டிச் சென்றுவிட்டன. தங்களுடன் வந்த குட்டி யானை, அந்த ஒயரை தாண்ட முடியாததால், பெரிய யானை ஒன்று, ஒயரை காலால் மிதித்து தரைமட்டமாக்க, குட்டி யானை மிக அழகாக அதனைக் கடந்து செல்கிறது.

இந்த அழகிய காட்சிகள் மட்டுமல்ல, யானைகள் விவசாயப் பகுதியிலிருந்து வெளியேறிச் செல்லும் போது, தங்கள் வீட்டு விருந்தாளிகள் பத்திரமாக செல்லும் வகையில் அவர்களை பத்திரமாக போய்விட்டு வாருங்கள், பார்த்துச் செல்லுங்கள் என்போம் அல்லவா? அதுபோல கிராம மக்கள், குட்டி யானை அந்த ஒயரைக் கடக்க முடியாமல் தவிக்கும் போது பெற்ற பிள்ளை தவிப்பதைப் போல ”புள்ள.. பச்சப் புள்ள.. பச்சப் புள்ள பாவம்.. வலிக்குமே பிள்ளைகளுக்கு.. குட்டிப் போகட்டும்... அவ்வளவு தான் அவ்வளவுதான்” என பின்னிருந்து குரல் கொடுப்பது மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த விடியோவை, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாஹு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

யானைக் குடும்பம், தங்களது குட்டி யானைக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்குகின்றன. கிராம மக்களின் அந்த குரல் மனதை நெகிழச் செய்வதாக உள்ளது என்றும் விடியோவில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com